”இனி ஸ்டாலின் முதலமைச்சரா ஆக Chance-ஏ இல்ல” – விஜய்யின் ஜோதிடர் சொன்ன கணிப்புகள்..!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறிய விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இனி முதலமைச்சராகும் யோகம் இல்லை என்று கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட், தற்போதைய அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய திரை நட்சத்திரங்கள் குறித்து தனது கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கட்சிகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே விஜய் வெற்றி பெறுவார் என ராதன் பண்டிட் கூறியதாகவும், பின்னர் தவெக முன்னிலை பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ள கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என அவர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாகியுள்ளது.
மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இனி ஓய்வை நோக்கி நகரும் என்றும், மீண்டும் முதலமைச்சர் பதவியை அடைவதற்கான யோகம் அவருக்கு இல்லை என்றும் ரத்தன் பண்டிட் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வந்திருப்பார் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தற்போது தேர்வு செய்துள்ள அரசியல் பாதை அவருக்கு சாதகமாக அமையும் என்றும் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் பயணம் வெற்றியை நோக்கி செல்லும் எனவும் அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ரத்தன் பண்டிட் கூறியுள்ளார். தனுஷ் அரசியலுக்கு வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் புதிய போட்டி உருவாகலாம் என்றும், ஆனால் அவரது வருகை விஜய்யின் அரசியல் வளர்ச்சியை பாதிக்காது என்றும் அவர் கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, அண்ணாமலை தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்றும் ராதன் பண்டிட் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி ஸ்டாலின், விஜய், உதயநிதி, தனுஷ், அண்ணாமலை என தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் முகங்களை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்த ஜோதிடக் கணிப்புகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
What's Your Reaction?