முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்னாச்சு? சட்டச்சபையில் உதயநிதி கேள்வி...!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கி நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விவசாயிகளுக்கான முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என்னாச்சு என்று தவெக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 7, 2026 - 10:03
Aug 7, 2026 - 10:05
முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்னாச்சு?  சட்டச்சபையில் உதயநிதி கேள்வி...!

சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக அரசு தனது முதல் பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட்டை ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இன்று உறுப்பினர்கள் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து வருகின்றனர்.

சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த இயக்குநர் பாக்யராஜ், எழுத்தாளர்கள் புவியரசு மற்றும் பூமணி, பாடகி ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதையடுத்து, காவிரி–மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க திமுக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவிரி பிரச்சினை மற்றும் முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார். மேலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளதால், பட்ஜெட் விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow