Troll மெட்டிரியலான ‘தி பாரடைஸ்’… நானி கொடுத்த ரியாக்ஷன்... !
நடிகர் நானி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு நடிகர் நானி தனது சமூக வலைதளப் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
’பார்டைஸ்’ படம் தொடர்பாக வெளியான விமர்சனங்களை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ள நானி, தன்னைப் பற்றியும் படத்தைப் பற்றியும் வெளியான Trolls-ஐயும் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
https://x.com/NameisNani/status/2103401662895583267?s=20
“தி பாரடைஸ் குறித்த உங்களின் விமர்சனங்களைப் பார்த்தேன். உங்கள் Trolls-ஐயும் ரசித்தேன். இந்தப் படத்துக்கு கிடைத்த விமர்சனங்கள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதற்காக அனைவருக்கும் நன்றி” என நானி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை உருவாக்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி இந்தப் படத்தை உருவாக்கியதாக நானி தெரிவித்துள்ளார்.
படத்தை கொண்டாடுவதும், விமர்சிப்பதும் பார்வையாளர்களின் விருப்பம் என்றும், படம் தொடர்பாக தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நானி கூறியுள்ளார்.
படம் வெளியான நிலையில், நானியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
What's Your Reaction?