Kanguva Release Date: சிங்கிளாக களமிறங்கும் கங்குவா... சூர்யா ரசிகர்களுக்கு ரெடியான சர்ப்ரைஸ் அப்டேட்!
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நாளை காலை 11 மணிக்கு அபிஸியல் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக 2021ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதனைத் தொடர்ந்து கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தில், ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா. அதன்பின்னர் கங்குவா படத்தில் பிஸியான சூர்யா, இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, கங்குவா திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் சிங்கிளாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் வேட்டையன் vs கங்குவா மோதும் சூழல் உருவானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வேட்டையனுக்காக கங்குவா ரிலீஸை தள்ளிவைத்தார் சூர்யா. இதுகுறித்து கார்த்தியின் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவே அறிவிப்பு வெளியிட்டார்.
ரஜினியை பார்த்து வளர்ந்தவன், அதுமட்டுமில்லாமல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் தான் மூத்தவர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கங்குவா அக்.10ல் வெளியாகாது எனவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து கங்குவா ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த சூர்யாவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியும் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சூப்பரான அப்டேட் வெளியாகவுள்ளது. நாளை (செப்.19) காலை 11 மணிக்கு உலகம் காத்திருக்கும் ஒரு செய்தி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இது கங்குவா ரிலீஸ் தேதி தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தப் படம் நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தை உலகம் முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் கங்குவா ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
What's Your Reaction?