இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது?

12 ராசிகளுக்கான இன்றைய பலன்களில் தொழில், பணவரவு, குடும்பம், சொத்து மற்றும் உடல்நலம் தொடர்பான பலன்கள் கூறப்பட்டுள்ளன.

Aug 23, 2026 - 07:00
இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது?

மேஷம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் கால கட்டம். சோம்பலும் கோப மும் தவிருங்கள். அலு வலகத்தில், சாதகமான சூழல் நிலவும். மேலதிகாரிகள் ஆத ரவு கிட்டும். பதவி, ஊதியம் உயரும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன் னியம் அதிகரிக்கும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் பைசலாகும். உறவுகளிடையே செல்வாக்கு உயரும். பயணத் தில் கவனச் சிதறல் கூடாது. கண்கள், மூட்டு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனைக் கும்பிடுங்கள். எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷபம்

முயற்சிகள் பலன்தரும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். உடனிருக்கும் யாரிடமும் வீண் புலம்பல் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் படிப் படியாக வரும். ஆடை, ஆபர ணம் சேரும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங் கள். வரவை முறைப்படுத்திச் செலவிடுங்கள். வாரிசுகளால் பெருமை ஏற்படும். தொலைதூரப் பயணங்களை பகலில் மேற் கொள்ளுங்கள். அலர்ஜி, சுவாச உபாதைகள் வரலாம். வேழமுகனை வணங்குங்கள். வாழ்க்கை வெளிச்சமாகும்.

மிதுனம்

நன்மைகள் அதிகரிக்கும் கால கட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பூர்வீக சொத்து லாபம் தரும். வளர்ப்புப் பிராணிகளிடம் கவனம் தேவை. வயதில் முதியவர்கள், பயணத்தில் கவனம். ஒற்றைத் தலைவலி, அடிவயிறு உபாதைகள் வர லாம். பெருமாள், தாயாரை வணங் குங்கள். பெருமைகள் சேரும்.

கடகம்

உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பலநாள் கனவுகள் நனவாகும். இல்லத்தில் சந்தோஷம் மலரும். அசையும் அசையா சொத்து சேரும். விலகி இருந்த உறவுகள் வந்து சேரும். குடும்பத்தில் மூத்தவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். பண வரவில் இருந்த தடைகள் நீங் கும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். தூக்கமின்மை, அஜீரண உபாதைகள் வரலாம். துர்க்கையைக் கும்பிடுங்கள். வாழ்க்கை துளிர்க்கும்.

சிம்மம்

திட்டமிட்டுச் செயல்பட்டால் செல்வாக்கு உயரும் காலகட்டம். பணியிடத்தில் யாரிடமும் வீண் வாதம் வேண்டாம். யாரையும் குறை சொல்ல வேண்டாம். வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். உறவுகளுடன் வாக்குவாதம் தவிருங்கள். ஆபரணங்களில் ஆடம்பரம் வேண்டாம். வரவை முறையாக சேமியுங்கள். இளம் வயதினர் சுபகாரியங்களில் அவசரப்பட வேண்டாம். தம்பதியர் மனம்விட்டுப் பேசுங்கள். வாகனப்பழுதை உடனே சீர்செய்யுங்கள். அல்சர், அலர்ஜி உபாதைகள் வரலாம். ஆறுமுகனை ஆராதியுங்கள். ஆனந்தம் சேரும்.

கன்னி

பொறுமையால் பெருமைபெற வேண்டிய காலகட்டம். பணியிடப் பொறுப்பு களில் முறையான திட்டமிடல் முக்கியம். குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்கள்.வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு கூடாது. பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுத்துப் போங்கள். ஆடை, ஆபரணம் சேரும்.தரல்,பெறலை குறித்து வையுங்கள். ஹார்மோன் உபாதைகளில் அலட்சியம் வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள். தோள்பட்டை, கழுத்து உபாதை கள் வரலாம். சிவனை வணங் குங்கள், வாழ்க்கை சீராகும்.

துலாம்

அல்லல்கள் நீங்கக் கூடிய கால கட்டம். பணியிடத்தில் உங்கள் வார்த்தையின் மதிப்பு கூடும். மரியாதை கிடைக்கும். வீட்டில் நிம்மதி நிலவும். உறவுகளின் பழைய பகையை மறப்பதுதான், நல்லது. வாழ்க்கைத் துணை யுடன் அன்னியோன்னியம் கூடும். முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்கள். வயதில் முதியவர்கள் மன அழுத்தம் தவிருங்கள். உணவை முறைப் படுத்துங்கள். இரவுப் பயணம் தவிருங்கள்.பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். நரசிம்மரை வணங்குங்கள். நன்மைகள் தொடரும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளும் அதனால் பெருமையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எதிர்பாராத இடமாற்றம் வந்தால் ஏற்றிடுங்கள். இல்லத்தில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளுடன் இருந்த பலநாள் பிரிவுகள் மாறும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பழைய கடன்கள் பைசல் ஆகும். கணவருடன் மனம்விட்டுப் பேசுங் கள். பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம். அடிவயிறு, பாதம் உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

தனுசு

கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பிறரைக் குறை சொல்ல வேண்டாம். இல்லத்தில் நல்லவை நடக்க, வார்த்தைகளில் இனிமை அவசி யம். குடும்ப உறுப்பினர்களி டம் குதர்க்கம் வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். குழந்தைகளிடம் அக்கறை செலுத்துங்கள். பொது இடங்களில் அடக்கமாகச் செயல்படுங்கள். வாகனத்தில் சிறுபழுதை சரிசெய்யுங்கள். முகம், வயிறு உபாதைகள் வர லாம். தட்சிணாமூர்த்தியைக் கும்பிடுங்கள். வாழ்க்கை தழைக்கும்.

மகரம்

ஏற்றமும் மாற்ற மும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிரி களால் ஏற்பட்டிருந்த பாதகங்கள் நீங்கும். கர்வம் தவிர்த்தால், சர்வமும் ஏற்றமாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ரத்தபந்த உறவுகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். குழந்தைகளால் பெருமை ஏற்படும். அசையும், அசையா சொத்து சேரும். வீடு, வாகனம் புதுப்பிக்க நேரும். மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் கூடாது. அஜீரணம், முதுகு உபாதைகள் வரலாம். ரங்கநாதரைக் கும்பிடுங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.

கும்பம்

பொறுப்பு உணர்வு டன் செயல் பட வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் படபடப்பும் பதற்றமும் கூடாது. பிறரை நம்பி உங்கள் பணியை ஒப்படைக்க வேண்டாம். வீட்டில் மகிழ்ச்சி நிறையும். சந்தேகமும், சஞ்சலமும் தவிர்த்தால் நிம்மதி நிலைக்கும். சகோதர உறவு களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். வீடு, வாகனம் தொடர்பான தஸ்தாவேஜுகளை பத்திரமா வையுங்கள். பயணத்தில் உடைமை பத்திரம். தூக்கமின்மை, ஒற்றைத் தலை வலி, வரலாம். சிவன் பார்வதியை வணங்குங்கள். வாழ்க்கை சிறக்கும்.

மீனம்

எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம். பணியிடத்தில் பிறர் தவறுக்கு நீங்கள் பழி ஏற்றிருந்த நிலை மாறும். அயல்நாடு செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். புதிய உறவும் அதனால் ஆதாயமும் ஏற்படும். பெற்றோர், பெரியோர் ஆசி கிட்டும். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, வாகனம் புதுப்பிக்க, மாற்ற நேரிடலாம். வயதில் முதியவர்கள் வழுக்கலான இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். வாராஹி வழிபாடு, வளமை சேர்க்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow