இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கு?

இன்றைய ராசிபலனில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் காணப்படுகின்றன. சில ராசிகளுக்கு பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Aug 27, 2026 - 06:18
இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கு?

மேஷம்:

இன்று நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் சாதகமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். இளைய சகோதரர்கள் பண உதவி கேட்கலாம். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
அசுவினி: நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரிஷபம்:

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.
கிருத்திகை: பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது சாதகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகலாம். சிலருக்கு அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம். பிற்பகலுக்குப் பிறகு உற்சாகம் திரும்பும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது அவசியம்.
மிருகசீரிடம்: மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

கடகம்:

இனம் புரியாத சோர்வு மனதில் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் அதிகரிக்கலாம். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் அளிக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஏற்படும் சிறிய சங்கடங்கள் பின்னர் நீங்கும்.
புனர்பூசம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பூசம்: தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்:

தாய்வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார். தேவையான உதவிகளும் கிடைக்கலாம். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அரசுப் பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றத்தை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
மகம்: தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும்.

கன்னி:

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி மாலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உதவி கேட்டு வரலாம். பிற்பகலுக்குப் பிறகு மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். இன்று தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்:

திடீர் செலவுகள் ஏற்படலாம். தேவையான பணம் கையில் இருப்பதால் அவற்றை சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எனினும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

விருச்சிகம்:

காரியங்கள் சாதகமாக நிறைவேறும் நாள். தந்தைவழியில் ஆதாயம் கிடைக்கலாம்; அதே நேரத்தில் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராக இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படலாம்.
விசாகம்: தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் ஆதரவு கிடைக்கும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து உற்சாகம் அளிக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.

மகரம்:

சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்கள் உதவி கேட்டு வரலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சிலருக்கு அலைச்சல் ஏற்படலாம். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்குப் பிறகு உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.

மீனம்:

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிடைக்கும். பிற்பகலுக்குப் பிறகு உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow