வட்டார வழக்கு.. நைஜீரியா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'வட்டார வழக்கு'. சந்தோஷ் நம்பிராஜன், ரவீணா ரவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார்.

Sep 10, 2024 - 16:54
வட்டார வழக்கு.. நைஜீரியா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு
vattara valakku screened at the nigeria international film festival

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'வட்டார வழக்கு'திரைப்படம், நைஜீரியாவில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 24 முதல் 27 வரை நடைபெறும் 2வது ரிவர்ஸ் பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. 

பங்காளி சண்டைகளும், அதன் பேரில் நடத்தப்படும் கொலைகளும் ஓடும் ரத்த ஆறும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பங்காளி பகையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். மதுரை அருகே வெயில் காயும் கிராமம் ஒன்றில் ஒரே ஜாதியை சேர்ந்த கண்ணுசேர்வை(விஜயகுமார்) குடும்பத்துக்கும், பூதனன் சேர்வை(விஜய் சத்யா) குடும்பத்துக்கும் தீராப் பகை. பணவசதி படைத்த பூதனன் சேர்வைக்கு நிகராக கண்ணு சேர்வையும் வளர முயற்சிக்கும்போது ஆரம்பிக்கும் பகை, தலைமுறை தாண்டி தொடர்கிறது.

கண்ணு சேர்வையின் மகன் சேங்கை மாறனுக்கு(சந்தோஷ் நம்பிராஜன்)  அடிதடி வெத்துகுட்டு அவனுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. இந்த பக்கமும், அந்த பக்கமும் சில கொலைகள், வழக்குகள் என்று போகும் வாழ்க்கையின் இடையில்  சேங்கை மாறனுக்கு காதல் மலர்கிறது. ‘டூலெட்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன்  காதலையும்,  பகையையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெயிலும், பெயிலுமாய் அலைகிற சேங்கை மாறனை உயிராக காதலிக்கிறாள் தொட்டிச்சி (ரவீனா ரவி). லவ் டுடே படத்தில் நடித்தவரும், மாமன்னன் படத்தில் பஹத் பாசிலின் மனைவியாக வந்து பலரது உள்ளங்களைக் கொள்ளையடித்தவருமான ரவீனா ரவி மதுரைக்காரப் பெண்ணாகவே தொட்டிச்சியாகவே வாழ்ந்திருக்கிறார். ஓரக் கண்ணால் பார்ப்பது, புருவத்தைக் கொண்டே காதல் அம்பு வீசுவது என 80களின் கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கிறார். 

1880களில் நடக்கிற மாதிரியான இந்த கதையில் இளையராஜா 80களில் சூப்பர் ஹிட்டான தனது பாடல்களை பொருத்தமான இடத்தில் வைத்துள்ளார். வயல்வெளி கொலை காட்சிகள், கோயில் திருவிழாக்கள், டீக்கடை அலப்பறைகள் என படம் முழுக்க வருகின்றன.கடந்த ஆண்டு இறுதியில் வெளியான வட்டார வழக்கு திரைப்படம் நைஜீரியாவில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 24 முதல் 27 வரை நடைபெறும் 2வது ரிவர்ஸ் பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. திரையிடலுக்குப் பிறகு நடைபெறும் கலந்துரையாடலில், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இணைய வழி மூலம் கலந்து கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow