ராதேவாக மாறிய தமன்னா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
உச்ச பட்ச கவர்ச்சியாக தமன்னா நடத்திய ஃபோட்டோஷூட் பெரும் சர்ச்சையானது. இந்து அமைப்புகள் கொந்தளித்த நிலையில் அந்தப் ஃபோட்டோக்களை அவசரம் அவசரமாக டெலிட் செய்திருக்கிறார் தமன்னா.
நடிகை தமன்னா சமீபத்தில் கண்ணனின் ராதையாக ஒரு ஃபோட்டோஷுட் நடத்தியிருந்தார். தி டிவைன் இல்யூஷன் ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் வெளியான இந்த புகைப்படங்கள் பகவான் கிருஷ்ணருக்கும் ராதாவுக்கும் இடையிலான அன்பின் வெவ்வேறு நிலைகளைக் காட்டியது.அதில் அவரது ஆடை குறித்து ரசிகர்கள் விமர்சித்ததால், தனது வலைப்பக்கத்திலிருந்து அப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியுள்ளார் தமன்னா.
நடிகை தமன்னா பாட்டியா இந்தியில் நடித்து வெளிவந்த ‘ஸ்ட்ரீ 2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது அதில் ‘ஆஜ் கி ராத்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் பாராட்டைப் பெற்றது. ஜெயிலர் படத்தில் கவர்ச்சி காட்டிய தமன்னா பாலிவுட் பட பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார். ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அவர் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பிரபல பேஷன் டிசைனர் கரண் தொரானியின் ஃபேஷன் லேபிளுக்காக ராதா-கிருஷ்ணா தீம் போட்டோ சூட்டில் கலந்துகொண்டார்.அதில் கண்ணனின் ராதாவாக காட்சியளித்தார். இந்த புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன் தமன்னா மற்றும் கரண் தொரானி இருவரும் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர். இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்த அவர், 'ராதாவாக நான் உருவகப்பட்டபோது உன்னதமாக உணர்ந்தேன். அனைத்தையும் மீறிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இந்தப் படங்கள் சிலரை மெய்சிலிர்க்க வைத்தாலும், மறுபுறம், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் நடிகை தமன்னாவுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
ராதேவை தவறாக சித்தரிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர். ராதா மற்றும் பகவான் கிருஷ்ணரின் தூய்மையான உறவை தவறாக சித்தரிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.
அந்தப் புகைப்படத்துக்காக தமன்னா அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும்; ராதாவை அவமதித்திருக்கிறார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. நாளுக்கு நாள் விமர்சனங்கள் வலுத்ததை அடுத்து அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அவர்கள் நீக்கியுள்ளனர்.
What's Your Reaction?