இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேஷம்:
நல்லவை நடக்கத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசத்தொடங்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத்துணையுடன் அன்னியோன்னியம் உருவாகும். தரல், பெறலில் நிதானம் முக்கியம். குடும்ப விஷயங்களை பொதுவெளியில் பேசவேண்டாம். செய்யும் தொழிலில் செழுமை உருவாகும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோருக்கு புதிய பதவி, பெருமைகள் கிட்டும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். பயணத்தில் வேகம் வேண்டாம். முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மகிழ்வு தரும்.
ரிஷபம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போரிடம் தேவையற்ற சினம் தவிருங்கள். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை ஏற்படும். உறவுகளிடம் வீண் உரசல் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு பெருமை, புகழ் கிட்டும். கலைஞர்கள் நிதானமாக இருப்பது நல்லது. வாகனப் பழுதை உடன் கவனியுங்கள். அடிவயிறு, இடுப்பு, நரம்பு உபாதைகள் வரலாம். குமரன் வழிபாடு, குதூகலம் தரும்.
மிதுனம்:
சுணக்கங்கள் நீங்கி சீரானபோக்கு நிலவக்கூடிய காலகட்டம். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணத்தைக் கையாள்வதில் நிதானம் தேவை. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். கடன்களில் அவசரம் வேண்டாம். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர் தலையீடு கூடாது. கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோர்க்கு நிதானம் அவசியம். கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தில் நிதானம் முக்கியம். ஒற்றைத் தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு பசுமை சேர்க்கும்.
கடகம்:
அனுகூலக் காற்று வீசத்தொடங்கும் காலகட்டம், அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் புதிய வாய்ப்புகளும் அதனால் ஏற்றமும் ஏற்படும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். குடும்பத்தில் புதிய வரவும் அதனால் மகிழ்வும் ஏற்படும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. ஒப்பந்தங்களில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் அமைதி காப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளில் முழுமை முக்கியம். இரவுப் பயணம் இயன்ற வரை தவிருங்கள். நரம்பு, மூட்டு, சுளுக்கு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நல்லவை சேர்க்கும்.
சிம்மம்:
பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பணிவே நல்லது. பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். இல்லத்தில் நல்லவை நடக்கத்தொடங்கும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்கள். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் கைகூடும். செய்யும் தொழிலில் புதிய மலர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள், கையெழுத்திடுவதில் நிதானம் முக்கியம். கலைஞர்கள் சோம்பலைத் தவிர்ப்பது அவசியம். பயணத்தில் உடைமை பத்திரம். பற்கள், அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
கன்னி:
நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணிபுரியும் இடத்தில் திட்டமிடுதலும் நேரம்தவறாமையும் முக்கியம். அயல்நாட்டு வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் தேவையற்ற ரோஷயம் தவிருங்கள். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. செய்யும் தொழிலில் முயற்சிகள் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்களுக்கு சிறு வாய்ப்பிலும் சின்சியர் முக்கியம். வாகனத்தில் நிதானம் அவசியம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். அரங்கன் வழிபாடு, ஆனந்தம் தரும்.
துலாம்:
எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்கால உயர்வுக்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும். மேலதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். குடும்பத்தில் சுமுகத் தென்றல் வீசத்தொடங்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். உறவுகளால் ஆதாயம் கிட்டும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். தரல், பெறலில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் தேவை. அரசியல், அரசுத் துறையினருக்குச் சாதகமான சூழல் நிலவும். கலைஞர்கள் எதிர்பாலருடன் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இரவுப் பயணத்தில் அவசரம் வேண்டாம். அடிவயிறு, நரம்பு, இடுப்பு உபாதைகள் வரலாம். அலர்மேல் மங்கை வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்.
விருச்சிகம்:
பொறுப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உருவாகும். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் நிதானம் தேவை. கலை, படைப்புத் துறையினருக்கு, திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரத் தொடங்கும். தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, சளி உபாதைகள் வரலாம். ஷண்முகன் வழிபாடு, சந்தோஷம் சேர்க்கும்.
தனுசு:
நன்மைகள் சீராக வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் அமைதியேநல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல்ஏற்றிடுங்கள். இல்லத்தில் இனிமைஇடம்பிடிக்கும். சுபகாரியங்கள் தொடர்ச்சியாகவரும். வீணான ரோஷம் யாரிடமும் வேண்டாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
செலவுகளில் சிக்கனம் தேவை. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கத் தொடங்கும். முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சாதக சூழல் நிலவும். கலைஞர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. பயணத்தில் கவனம் முக்கியம். முக உறுப்புகள், முதுகு, தோள்பட்டை உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, கஷ்டம் தீர்க்கும்.
மகரம்:
பலவிதத்திலும் மேன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பதவி, ஊதிய உயர்வு கைகூடும். எதிர்பாலரிடம் நெருக்கம் வேண்டாம். குடும்பத்தில் வசந்தக் காற்று வீசத்தொடங்கும். கடந்த கசந்த காலக் கதைகளைப் பேசவேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் நேரடிக் கவனம் தேவை. ஒப்பந்தங்களில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் துறையினர்க்கு மேன்மைகள் வரத்தொடங்கும். கலைஞர்கள், படைப்பாளிகள் தலைக்கனம் தவிர்ப்பது நல்லது. வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். பற்கள், கால் உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. கணபதி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
கும்பம்:
சங்கடங்கள் குறையத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே நெருக்கம் உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனம் மகிழும்படி வாரிசு வரம் கிட்டும். உறவுகள் வருகையால் மகிழ்ச்சி சேரும். செய்யும் தொழிலில் முழு கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் தலைக்கனம் தவிர்ப்பது நல்லது. மேலிடத்துடன் சிறு உரசலும் வேண்டாம். கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணத்தில் உடைமை பத்திரம். தலைவலி, தூக்கமின்மை உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
மீனம்:
சுமுகமான போக்கு நிலவக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் வாக்கின் செல்வாக்கு உயரும். இடமாற்றத்தில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். தரல், பெறலில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள் பத்திரம். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். பங்கு வர்த்தகத்தில் நிதானம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். அலர்ஜி, காய்ச்சல் உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு இனிமை சேர்க்கும்.
What's Your Reaction?

