இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? வாங்க பார்க்கலாம்...!
இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம்? முழுப் பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
இன்று பணவரவும் குடும்ப மகிழ்ச்சியும் கலந்த நாளாக அமையலாம். தேவையான பணம் கையில் இருந்தாலும், எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது சாதகமான முடிவுகளைத் தரலாம். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கக்கூடும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். அலுவலகத்தில் வழக்கமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த அளவில் இருக்கும்.
ரிஷபம்
இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இருப்பினும், புதிய முயற்சிகளைத் தொடங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் வழியாகச் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன் பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கக்கூடும்.
மிதுனம்
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அதேசமயம், திடீர் செலவுகள் கையிருப்புப் பணத்தைக் குறைக்கக்கூடும். மாலையில் உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் விற்பனை சீராக இருக்கலாம்.
கடகம்
இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளச் சாதகமான சூழல் உருவாகலாம். தேவையான பணவரவு கிடைப்பதால் மனநிறைவு ஏற்படும். விருப்பத்திற்கேற்ற ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பும் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அளிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்குப் பாராட்டு கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு மிதமாக இருந்தாலும், சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் குறையலாம்.
சிம்மம்
இன்று உடல்நலத்தில் முன்னேற்றமும் புதிய முயற்சிகளில் நம்பிக்கையும் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். வீட்டைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாகச் சோர்வு ஏற்படலாம். பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது உதவும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்கள் தொடர்பான செலவுகள் ஏற்பட்டாலும், புதிய வாடிக்கையாளரின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.
கன்னி
இன்று செலவுகளைக் கட்டுப்படுத்துவதிலும் உடல்நலத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகள் மனக்கவலையை ஏற்படுத்தலாம். தேவையற்ற பயணங்களையும் அலைச்சலையும் குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். உணவு முறையிலும் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பாக நடந்துகொள்வது உறவுகளை மேம்படுத்தும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டு விலகலாம். வியாபாரத்தில் வரவு, செலவு மிதமாக இருந்தாலும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
இன்று மனநிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கலாம். கையில் தேவையான பணம் இருப்பதால் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியும். தொடங்கிய காரியங்கள் தடையின்றி முடிவடைய வாய்ப்புள்ளது. தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபமும் பங்குதாரர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கக்கூடும்.
விருச்சிகம்
இன்று உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம். கணவன், மனைவி இடையே அன்பும் நெருக்கமும் மேம்படும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். முக்கியமான விஷயங்களில் தைரியமாகச் செயல்படுவீர்கள். சிலருக்குப் புதிய ஆடைகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பிற்பகலுக்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனை மிதமாக இருந்தாலும் பங்குதாரர்கள் வழியாக நன்மைகள் கிடைக்கலாம்.
தனுசு
இன்று குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் தொடர்பாக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். காரியங்களில் தாமதம் அல்லது சிறிய தடைகள் உருவாக வாய்ப்புள்ளது. நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வழக்கமான நிலை தொடரலாம். பங்குதாரர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவியும் பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மகரம்
இன்று எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை மூலம் சில ஆதாயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளுக்காகச் செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே புரிதலும் நெருக்கமும் மேம்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்கலாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது நல்லது. லாபம் வழக்கமான அளவில் இருக்கலாம்.
கும்பம்
இன்று தேவையற்ற அலைச்சல்களையும் செலவுகளையும் குறைத்துக்கொள்வது அவசியம். மனக்குழப்பங்கள் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என்பதால் திட்டமிட்டு செயல்படுங்கள். கணவன், மனைவி இருவரும் விட்டுக்கொடுத்துச் செல்வது குடும்ப அமைதிக்கு உதவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். அலுவலகத்தில் முக்கியப் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே கவனிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்கள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். விற்பனை மிதமாக இருக்க வாய்ப்புள்ளது.
மீனம்
இன்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் பொருளாதார நிம்மதி ஏற்படலாம். புதிய ஆடைகள் அல்லது ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். குடும்பப் பொறுப்புகளை உற்சாகத்துடன் நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். பிள்ளைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்தி வரலாம். எதிர்பாராத சூழல்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த அளவில் அமையலாம்.
What's Your Reaction?

