நடிகை சமந்தா 2-வது திருமணம் : சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் ரகசிய புகைப்படங்கள் 

நடிகை சமந்தா 2-வது திருமணம் செய்து கொண்ட ரகசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

நடிகை சமந்தா 2-வது திருமணம் : சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் ரகசிய புகைப்படங்கள் 
Actress Samantha's 2nd marriage

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை அவர் விவாகரத்து செய்தார். முதல் திருமண முறிவுக்குப் பின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த சமந்தா அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிட்டாடல்- ஹனி பன்னி என்ற ஓடிடி தொடரிலும் நடித்திருந்தார். 

சில மாதங்களாகவே, இவர் ராஜ் நிடிமொரு என்கிற இயக்குநரை இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இப்போது திருமணம் ஆக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமந்தா-ராஜ் நிடிமொரு திருமணம்நடந்ததாகவும், இதில் வெகு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

சமந்தா, The Family Man என்கிற வெப் தாெடரில் நடித்திருந்தார். இந்த தொடரை இயக்கியவர்தான், ராஜ் நிடிமொரு. இந்த ஷூட்டிங் செட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து. தற்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராஜ் நிடிமொருவிற்கு, ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. 8 வருடம் திருமண உறவில் இருந்த இவர், பின்னர் தன் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow