Suriya 44: சூர்யா 44ல் இணைந்த மகான் பட பிரபலம்... அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

May 29, 2024 - 18:26
Suriya 44: சூர்யா 44ல் இணைந்த மகான் பட பிரபலம்... அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

சென்னை: கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்ட சூர்யா, தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ராமாயணம் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. முதன்முறையாக சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது. இதனால் சூர்யா 44 படத்துக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் அபிஸியலாக வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 44 படத்தில், சினிமோட்டோகிராபர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் ஜகமே தந்திரம், மகான் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ராக்கி, சீதா ராமம் படங்களுக்கும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா தான் சினிமோட்டோகிராபி செய்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவை தொடர்ந்து சூர்யா 44ல் இணைந்துள்ள நட்சத்திரங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகவுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow