சட்டமன்ற தேர்தல் முடிவு : பாடல் வெளியிட்டு திமுக சீண்டி பார்க்கிறாரா இசையமைப்பாளர் இளையராஜா? 

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஆளும் திமுகவை இளையராஜா சீண்டி பார்த்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தல் முடிவு : பாடல் வெளியிட்டு  திமுக சீண்டி பார்க்கிறாரா இசையமைப்பாளர் இளையராஜா? 
பாடல் வெளியிட்ட இளையராஜா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் பழைய படப் பாடல் ஒன்றினை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், 1988-ஆம் ஆண்டு விஜய் சிறுவயதில் நடித்த 'இது எங்கள் நீதி' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.

இளையராஜா பகிர்ந்துள்ள அந்தப் பாடலில், "சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கும் வேளையில், "நாடு காத்திருக்கு" என்ற வரிகள் கொண்ட பாடலை இளையராஜா வெளியிட்டிருப்பது தற்செயலானது அல்ல என்று இணையவாசிகள் கருதுகின்றனர். இது விஜய்யின் அரசியல் வருகைக்கு இளையராஜா தெரிவிக்கும் மறைமுக ஆதரவா என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தவெக தலைவருக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இளையராஜாவின் இந்தப் பதிவு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவதோடு, திமுகவை சீண்டி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow