நீதிபதி சந்துரு அறிக்கையை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. அதிர்ந்த சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து இன்று அதிரடியாக வெளிநடப்பு செய்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை கிழித்து வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Jun 24, 2024 - 17:39
நீதிபதி சந்துரு அறிக்கையை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. அதிர்ந்த சென்னை மாநகராட்சி

லோக்சபா தேர்தலுக்குப் பின் முதல் முறையாக சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவின் சமீபத்திய அறிக்கையைக் கண்டித்து கடுமையாக பேசினார். அத்துடன் கவுன்சிலர் உமா ஆனந்தன் மாநகராட்சி கூட்டத்திலேயே ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை கிழித்து எறிந்தார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சி கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் பல்லடம் பக்கத்தில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ சுடுகாட்டில் விடவில்லை. இதை பற்றி எல்லாம் நீதிபதி சந்துரு பேசியிருக்க வேண்டும். ஒரு தலைபட்சமான அறிக்கை, ஒரு தலைபட்சமான நீதிபதியை வைத்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகமத்துக்கு ஒரு நீதிபதி வைக்குறாங்க.. அவர் கடவுள் மறுப்பு கொள்கையாளர்.. அவரை எப்படி ஆகமத்துக்கு போடலாம்.. அதில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து அறிக்கை தயாரிக்க சொல்வது என்பது கண் துடைப்பு நாடகம். நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு சென்னை மாநகர மாமன்ற கூட்டம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால் நீதிபதியின் அறிக்கையை நான் கிழித்து வீசினேன். 

ஒரு திமுக உறுப்பினர் என்னை வெளியே போக சொன்னார். யார் என்று கூட என்னால் பெயரை சொல்ல முடியும்.. இந்த சமயத்தில் நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும் என்று ஆவேசமாக கேட்டார் கவுன்சிலர் உமா ஆனந்தன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow