திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல தடை : பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் குவிப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் நான்காம் நாளாக பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி மறுப்பு; 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் நான்காம் நாளான இன்றும் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் நேற்று காலை கூடுதலாக 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதட்டமான சூழல் தணிந்ததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்குகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் மலைக்கு மட்டும் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது அந்த பதட்டம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
What's Your Reaction?

