சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : டிச 25 முதல் ஊட்டி சிறப்பு ரயில் 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை கொண்டாட்டங்களை சுற்றுலா பயணிகள் ஹாப்பியாக கொண்டாட, ஊட்டி சிறப்பு ரயிலை டிச 25-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : டிச 25 முதல் ஊட்டி சிறப்பு ரயில் 
Ooty special train from Dec 25

இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.

மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.

இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2.50, மாலை 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் குன்னூர் செல்லும். மறுமார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 10.45 மணிக்கு ஊட்டி செல்லும்.

மேலும் வருகிற 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 16, 17, 18, 24, 25, 26-ந்தேதி வரை குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். அதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அவற்றில் முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow