தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி- யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

அர்ச்சனா பட்நாயக் கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nov 12, 2024 - 15:11
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி- யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ.12)பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் இருந்து வந்த அர்ச்சனா பட்நாயக் சமீபத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த சத்யபிரதா சாகு தற்போது தமிழக அரசின் கால்நடைத் துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த பொறுப்புக்கு அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் ஆக பணியாற்றி வந்தார்.இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

அர்ச்சனா பட்நாயக் கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் சிறப்பையும் அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார். கால்நடைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சத்யபிரதா சாகு வும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow