யூகம், விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகளை நம்பாதீர்!...த.வெ.க-வினருக்கு முக்கிய அறிவிப்பு...
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை படிவம் என சமூக வலைதளங்களில் வெளியானது ஒரு போலி புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கினார். வரும் நாடாளுமன்றத்தில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி, செயலி மூலம் தொடங்கப்படும் எனவும், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உறுப்பினராக சேருவதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் சேர உறுப்பினர் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான படிவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, கடந்த 2ஆம் தேதி வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி தான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
What's Your Reaction?