தேர்தல் நேரத்தில் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல... மறைமுகமாக சாடிய முதலமைச்சர்

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் பழக்கம் திமுகவுக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Mar 4, 2024 - 12:50
தேர்தல் நேரத்தில் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல... மறைமுகமாக சாடிய முதலமைச்சர்

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ரயில் மூலம் மயிலாடுதுறை சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு ஓராண்டுக்குள் அங்கு ஆட்சியர் அலுவலகம் திறந்தது திமுக அரசின் சாதனை என்றார். புது மாவட்டங்களை அறிவிப்பது பெரிதல்ல, அந்த மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகளை அமைத்துத் தருவது தான் பெரிது எனவும், அதனை திமுக அரசு திறமையுடன் கையாண்டு இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 

அதோடு திமுக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களை சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் "நீங்கள் நலமா" என்ற திட்டத்தை வரும் 6-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவித்தார். இதன் மூலம் மக்களிடம் நேரடியாக தொலைபேசி வாயிலாக பேசி, அவர்களுக்கு தேவையானவற்றை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தை காட்டுபவர்கள் நாங்கள் இல்லை எனவும், அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கும் பிரதமர் மோடி, நமது ஓட்டு மற்றும் வரிப்பணம் மட்டும் போதும் என தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow