Director Shankar: இயக்குநர் ஷங்கர் மகளின் 2வது திருமணம்… ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Apr 15, 2024 - 15:35
Director Shankar: இயக்குநர் ஷங்கர் மகளின் 2வது திருமணம்… ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் முதல் விரைவில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் வரை ஷங்கரின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஷங்கரின் முதல் ஐஸ்வர்யாவுக்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. 

2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரன் என்பவரை திருமணம் செய்திருந்தார் ஐஸ்வர்யா ஷங்கர். இவர்களது மண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் எழ, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து ஷங்கரின் உதவியாளர் தருண் கார்த்திகேயனுடன் சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் நடந்தது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் என ஒரே நேரத்தில் இரண்டு மெகா பட்ஜெட் படங்களை இயக்கி வரும் நிலையிலும், மகள் திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருந்தார் ஷங்கர்.  

இந்நிலையில் இன்று சென்னையில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார். அவரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரை பிரபலங்களும் ஐஸ்வர்யா ஷங்கருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  

இயக்குநர் ஷங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow