பாஜக வலிமையான ஆட்சி தரும்.. இந்தியாவை வல்லரசாக்குவோம்.. பிரதமர் மோடி உறுதி

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். போர் நடக்கும் நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கே முன்னுரிமை கொடுப்போம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Apr 15, 2024 - 15:42
பாஜக வலிமையான ஆட்சி தரும்.. இந்தியாவை வல்லரசாக்குவோம்.. பிரதமர் மோடி உறுதி

லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய தொகுதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பாஜகவின் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டை முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இரண்டுமுறை அரியணையில் அமர்ந்து 10ஆண்டு காலம் ஆட்சி செய்த பாஜக ஹாட்ரிக் வெற்றிக்காக பல வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று  (14.4.2024) அன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி,  இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து வருத்தத்துடன் பேசினார். உலகின் பல நாடுகளில் போர் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால் உலக நாடுகள் அமைதியை இழந்து நிற்கின்றன. 

போர் வரும் சூழல் இருப்பதால், ஒரு நிலையான மற்றும் வலுவான ஆட்சி இங்கு அமைய வேண்டும், அப்போது தான் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்து எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், போர் நடக்கும் நாடுகளில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று நம்பிக்கையாகப் பேசினார்.

மேலும், “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எங்கள் பல ஆண்டுகால நோக்கமான இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல இந்தியாவை வல்லரசு நாடாக மேம்படுத்துவோம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow