வாக்காளர் ஐடி இல்லையா? அப்ப இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்த ஓட்டு போடலாம்!

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள மாற்று புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

வாக்காளர் ஐடி இல்லையா? அப்ப இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்த ஓட்டு போடலாம்!
வாக்காளர் ஐடி இல்லையா?

இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

* ஆதார் அட்டை, * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, * புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், * தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,

* ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, * ஓட்டுநர் உரிமம், * வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card), * தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, * இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

* மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும்

* இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றை வாக்களிக்க பயன்படுத்தலாம். இந்த ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow