சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்:வானிலை ஆய்வு மையம்

கடந்த இரண்டு தினங்களாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. 14  மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்:வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் 

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் 13 முதல் 15ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow