GOAT: “தளபதி விஜய் ஃபர்ஸ்ட் டைம்..” யுவன் கொடுத்த GOAT அப்டேட்... சம்பவம் ரெடி!

விஜய்யின் கோட் படத்தில் இருந்து யுவன் சங்கர் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

May 27, 2024 - 13:55
GOAT: “தளபதி விஜய் ஃபர்ஸ்ட் டைம்..” யுவன் கொடுத்த GOAT அப்டேட்... சம்பவம் ரெடி!

சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்குப் பின்னர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் யுவன். இதனால் தி கோட் படத்தில் யுவனின் மியூசிக்கல் ட்ரீட் தரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான விசில் போடு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. 

விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூன்று பேரும் டான்ஸில் மிரட்டியதால், விஷுவலாக மட்டுமே செம்ம ட்ரீட்டாக அமைந்தது விசில் போடு பாடலில். ஆனால், யுவனின் இசையில் வைப் இல்லை என விஜய் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால் இனிவரும் பாடல்களில் விஜய்க்காக யுவன் ஸ்பெஷலாக சம்பவம் செய்வாரா இல்லை அதிலும் ஏமாற்றம் தானா என குழப்பத்தில் உள்ளனர். அதேபோல் தி கோட் படத்தின் பின்னணி இசைக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட விஜய், தி கோட் படத்தின் ஆல்பம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார். அதில், கோட் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது எனக் கூறிய அவர், ஃபர்ஸ்ட் டைம் விஜய் ஒரே படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலங்களில் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் பாடுவது விஜய் வழக்கம். அதன்பின்னர் பாடுவதில் ஆர்வம் காட்டாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுகிறார் விஜய். கோட் படத்தின் விசில் போடு பாடலை விஜய் பாடியுள்ளதால், அவரது கோட்டா முடிந்துவிட்டது என ரசிகர்கள் நினைத்திருந்தனர். அவர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்து விஜய் குரலில் இன்னொரு பாடல் வெயிட்டிங் என தக் லைஃப் கொடுத்துள்ளார். அதேநேரம் விஜய் பாடியுள்ள மேலும் ஒரு பாடல், ஐட்டம் சாங்-ஆ அல்லது மெலடியா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

அதேபோல், விரைவில் கோட் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, அடுத்து ப்ரோமோ வீடியோவை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம். இதுகுறித்தும் சீக்கிரமே அபிஸியலாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. கோட் படத்தை முடித்துவிட்டு தளபதி 69ல் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதும் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow