Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் அரசியல் ஆசை... கதையுடன் ரெடியான பிரபல இயக்குநர்!
சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடம் மிகப் பெரிய ஹைப் கொடுத்துள்ளது.
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அமரன் ஷூட்டிங்கை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது எஸ்கே 23 படத்தில் பிஸியாகிவிட்டார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து செம்ம மாஸ்ஸான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் தி கோட் படத்தில் கேமியோவாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். விஜய்யுடன் மெர்சலான ஆக்ஷன் காட்சியில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போதே சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரபுவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது தற்போது கன்ஃபார்மாகியுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் தி கோட் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால், தனது அடுத்தப் படத்திற்கு ரெடியாகிவிட்ட வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறியுள்ளாராம்.
ஷங்கர் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன், தரமான பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியிருந்தது. ஒருநாள் முதல்வர் என்ற கான்செப்ட்டில் முதல்வன் படத்தை இயக்கியிருந்தார் ஷங்கர். ரஜினி நடித்திருக்க வேண்டிய இப்படத்தில் அர்ஜுன் நடித்தது தனி கதை. இந்நிலையில், அதேபோல், ஒரு அரசியல் பின்னணி கொண்ட கதையை சிவகார்த்திகேயனுக்காக ரெடி செய்துள்ளாராம் வெங்கட் பிரபு. சிவகார்த்திகேயனும் இந்த கதைக்கு ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே மாநாடு படத்தில் இது வெங்கட் பிரபுவின் அரசியல் என டேக் லைன் போட்டு அசத்தியிருந்தார் வெங்கட் பிரபு.
இப்போது அதைவிடவும் வேறலெவல் பொலிட்டிக்கல் ஸ்க்ரிப்ட்டுடன் சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளாராம். விஜய்யின் தி கோட் பட ஷூட்டிங் முடிந்ததும், சிவகார்த்திகேயன் படம் குறித்து அபிஸியலாக அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்நிகழ்ச்சி அரசியல் கட்சியின் மினி மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?