Indian 2: கமலின் இந்தியன் 2 ஆல்பம் ரிலீஸ்... அனிருத் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா..?

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் ஆல்பம் தற்போது வெளியானது.

Jun 1, 2024 - 17:28
Indian 2: கமலின் இந்தியன் 2 ஆல்பம் ரிலீஸ்... அனிருத் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா..?

சென்னை: இந்தாண்டு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று இந்தியன் 2. உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எஸ்ஜே சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் இந்தியன் 2-வில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது. இந்தியன் கூட்டணியில் இருந்த கமல், இயக்குநர் ஷங்கர் மட்டுமே இரண்டாம் பாகத்தில் உள்ளனர். முக்கியமாக இசைப் புயல் ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

முதன்முறையாக ஷங்கர் கூட்டணியில் அனிருத் இணைந்துள்ளதால், இந்தியன் 2 படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தியன் 2 டீசரில், அனிருத்தின் பிஜிஎம் ஒர்த்தாக இல்லை என ரசிகர்கள் நெகட்டிவாக விமர்சனம் செய்திருந்தனர். முக்கியமாக இந்தியன் முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மானின் மிரட்டலான பிஜிஎம்-ஐ வைத்து அனிருத்தை ட்ரோல் செய்து வந்தனர். மேலும் இந்தியன் 2-வில் அனிருத்தின் பிஜிஎம் தரமாக இருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பினர். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸான இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாடலும் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் ரீச் ஆனது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் காம்போவில் மெலடியாக உருவாகியிருந்தது இந்தியன் 2 செகண்ட் சிங்கிள். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெறுவதை அடுத்து, படத்தின் மொத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியன் 2 ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Paaraa, Calendar Song, Neelorpam, Zagazaga, Come Back Indian, Kadharalz என ஆறு பாடல்களையும் வெரைட்டியாக கொடுத்துள்ளார் அனிருத்.

இந்தியன் 2 ஆல்பத்துக்கு ரசிகர்களும் பாசிட்டிவாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அனிருத்தின் இசை சூப்பர் என்றும், முக்கியமாக நீலோற்பம் என்ற மெலடி பாடல் கூடுதல் சிறப்பு எனவும் பாராட்டியுள்ளனர். அதேநேரம், “இந்தியன் 2 இதெல்லாம் ஒரு பாட்டா இந்தியன் ரஹ்மான் இசையில் அதுதான் பாட்டு” என அனிருத்தை ட்ரோல் செய்யவும் நெட்டிசன்கள் மறக்கவில்லை. அனிருத் இசையில் இந்தாண்டு வெளியான முதல் ஆல்பம் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என பார்க்க அனிருத்தும் ஆர்வமாக இருப்பார். அதேபோல், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், அனிருத் லைஃ பெர்ஃபாமன்ஸ் பண்ணவிருப்பதும் ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow