Kavin: பக்கா ஸ்கெட்ச்! சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடிக்கும் கவின்... VVS பார்ட் 2..?

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அவரது அடுத்த கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Kavin: பக்கா ஸ்கெட்ச்! சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடிக்கும் கவின்... VVS பார்ட் 2..?

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் கவின். சீரியல், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், பிக் பாஸ் என ரவுண்ட் வந்த அவருக்கு, டாடா திரைப்படம் சூப்பரான கம்பேக் கொடுத்தது. இதனால், கவின் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் கவின் நடிப்பில் இளன் இயக்கிய ஸ்டார் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் கொடுத்த ஹைப் காரணமாக முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக ஸ்டாருக்கு பெரிய ரீச் இல்லை என்பதால் டாடா அளவிற்கு கலெக்ஷன் செய்யவில்லை.

ஸ்டாரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஸ் இயக்கத்திலும், அதனையடுத்து நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குநர் பொன்ராம் கவினை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளாராம். சிவகார்த்திகேயன் கேரியரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிக முக்கியமான படம் எனலாம். சிவகார்த்திகேயன் வில்லேஜ் கெட்டப்பில் நடித்திருந்த இந்தப் படம் காமெடி ப்ளஸ் கமர்சியல் ஜானரில் ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கியது. இதன் தொடர்ச்சியாக ரஜினி முருகன் திரைப்படம் மூலம் மீண்டும் சம்பவம் செய்தது சிவாகார்த்திகேயன், பொன்ராம் காம்போ.

ஆனால், அதன்பின்னர் ரிலீஸான சீமராஜா சிவகார்த்திகேயனுக்கு மறக்க முடியாத தோல்விப் படமாக அமைந்தது. அப்போது பிரிந்த சிவகார்த்திகேயன் – பொன்ராம் ஜோடி மீண்டும் இணையவில்ல. அதுமட்டும் இல்லாமல் பொன்ராம் தயார் செய்து வைத்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் நோ சொல்லிவிட்டார். இதனையடுத்து தற்போது கவினை சந்தித்துள்ள பொன்ராம், வில்லேஜ் சப்ஜெக்ட் ஸ்டோரியை அவரிடம் கூறியுள்ளார். அந்த கதையை கேட்ட கவினும் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டதாகத் தெரிகிறது.

அதன்படி, கவின் – பொன்ராம் இணையும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சிட்டி ஜானர் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் கவின். முதன்முறையாக பொன்ராம் இயக்கத்தில் வில்லேஜ் ஹீரோவாக களமிறங்கலாம். அதேபோல், கவின் இதுவரை காமெடி ஜானர் படங்களில் நடிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கும் இது முடிவு கட்டும் எனத் தெரிகிறது. குடும்ப உறவுகளை பின்னணியாக வைத்து உருவாகவுள்ள இந்தப் படம் கவினுக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடமும் சி சென்டரிலும் பேர் வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow