ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்: சவரன் காலையில் ரூ.1,280. மாலையில் ரூ.2,320 உயர்வு 

தங்கத்தின் விலை காலை, மாலை என இரு முறை உயர்ந்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ,2,320 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்: சவரன் காலையில் ரூ.1,280. மாலையில் ரூ.2,320 உயர்வு 
Gold rising at rocket speed

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தற்போது சவரன் ரூ 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலையில் கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் மாலை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில், மாலை ரூ.2,320 உயர்துள்ளது.

இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 3,40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow