இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.20 குறைவு, வெள்ளி விலை மாற்றமில்லை

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. 

Feb 27, 2026 - 10:14
இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.20 குறைவு, வெள்ளி விலை மாற்றமில்லை
சவரனுக்கு ரூ.20 குறைவு, வெள்ளி விலை மாற்றமில்லை

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலையேற்றதால் தங்கம் சவரனு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,360-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்த வரை விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இரண்டாவது நாளாக தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900 விற்பனை செய்யப்பட உள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு நகைப்பிரியர்களுக்கு சிறிது ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow