தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி 

நேற்றைய தினம் தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு

ஈரான் அமெரிக்க போர் நிறுத்தம் காரணமாக நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு அதிரடியாக உயர்ந்தது. ஹோர்முஸ் நீரிணை ஈரான் இன்று மீண்டும் முடியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது. 

நேற்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ. 2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow