இதுக்கு எண்டே கிடையாதா?: தங்கம் சவரனுக்கு ரூ.2,960, வெள்ளி கிராம் ரூ.400 உயர்வு
தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் நாள்தோறும் தங்கம், வெள்ளி விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ஒருலட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் டப் கொடுக்கும் வகையில் வெள்ளியும் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கிராம் 400 ரூபாயை விரைவில் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய தினம் வெள்ளி விலை கிராம் ரூ 400 தொட்டது. நகைப்பிரியர்கள் ஷாக் அடிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
Lதொடக்க நாளானநேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்பட்டது.தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை உயர்வை கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. கிலோ வெள்ளி ரூ 12 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,87,000 விற்பனை ஆனது.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

