பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் : காவல்துறையினர் கைது செய்தனர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் : காவல்துறையினர் கைது செய்தனர்
Government employees protest demanding old pension scheme

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அரசு ஊழியர்கள்  போராட்டம் நடத்த ஒன்று கூடினார்.  காவல் துறை எதிர்ப்பை மீறி, காமராஜர் சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தடுக்கும் வகையில் அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். 

மிழ்நாடு அரசு உயர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் மாலையில் காவல்துறையினர் விடுதலை செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow