திரைஉலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை? சிம்பு பட இணை தயாரிப்பாளரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை
போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக சிம்பு பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். அப்போது சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ ஜி கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத்தை திருமங்கலம் போலீசார் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்புதீன் ஏற்கனவே நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். மேலும் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் எந்தெந்த பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாக சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கிறது.
What's Your Reaction?

