"பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் அறிமுகமாக வேண்டும்" - இர்ஃபான் பதான்

Feb 25, 2024 - 11:27
"பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் அறிமுகமாக வேண்டும்" - இர்ஃபான் பதான்

நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால், இந்தியாவில் அறிமுகமாக வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு இது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப்-க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், “நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால், இந்தியாவில் அறிமுகமாக வேண்டும் என்று விரும்புவீர்கள். இதுவே நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் அறிமுகப் போட்டியில் களமிறங்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்துகொண்டு, இந்தியாவில் அறிமுகப் போட்டியில், நீங்கள் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் முதல் ஆட்டத்தின் முதல் நாளில் நீங்கள் சிறப்பாக விளையாடி, 3 விக்கெட்டுகளை எடுத்தால், நீங்கள் நன்றாக செயல்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்” என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow