நடத்தையில் சந்தேகம்; பல பெண்களுடன் தொடர்பு - தலையில் அம்மி கல்லை போட்டு கொலை

Feb 25, 2024 - 11:55
Feb 25, 2024 - 12:02
நடத்தையில் சந்தேகம்; பல பெண்களுடன் தொடர்பு - தலையில் அம்மி கல்லை போட்டு கொலை

தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்து கயிற்றால் கழுத்தை நெரித்து, தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொலை செய்த சம்பவம் ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வேலாயுதபுரத்தில் சேர்ந்தவர் பால்ராஜ் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், ரஜினிகாந்த், சுரேஷ்குமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். 

பணி ஓய்வு பெற்ற ஜெயராஜுக்கு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி ஓய்வுக்காக கிடைத்த 40 லட்சம் ரூபாய் மற்றும் மாத ஓய்வூதிய தொகை 40 ஆயிரம் ரூபா ஆகியவற்றை குடும்பத்திற்கு தராமல், அந்த பெண்களுக்கு ஜெயராஜ் செலவு செய்துள்ளார். இதுகுறித்து மனைவி வசந்தா கேட்டதால் அடிக்கடி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயராஜ் தனது மனைவியை வேறொரு நபருடன் இணைத்து அவதூறாக பேசி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றும் வழக்கம் போல ஜெயராஜ் தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஜெயராஜ் வீட்டின் உள்ளே தூங்க சென்றுள்ளார். தனது கணவனின் செயல்களை நினைத்து வசந்தா கண்ணி விட்டு அழுது கொண்டிருக்கும் போது, அவர்களுடைய இளைய மகன் சுரேஷ்குமார் தனது அம்மாவிடம் நடந்தவற்றை கேட்டுள்ளார். தினந்தோறும் இப்படி சித்திரவதை படுவதை விட ஜெயராஜ் என்பவரை கொலை செய்து விட தாய் மகனும் முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஜெயராஜை, கழுத்தில் கயிறை வைத்து நெறித்து அவரது மகன் சுரேஷ்குமார் பிடிக்க, வசந்தா வீட்டில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தில் ஜெயராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ஜெயராஜ் கொலை செய்த தாய் மற்றும் மகன் இருவரும் நேரடியாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஆஜரானது மட்டுமின்றி வீட்டில் நடந்த சம்பவங்களையும் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து மணியாச்சி டி.எஸ்.பி லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். தாய் மற்றும் மகன் இணைந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow