Indian 2: வெளியானது இந்தியன் 2 செகண்ட் சிங்கிள்... அனிருத் பாஸ் ஆகிட்டார்ன்னு சொல்லுங்க!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

May 29, 2024 - 12:12
Indian 2: வெளியானது இந்தியன் 2 செகண்ட் சிங்கிள்... அனிருத் பாஸ் ஆகிட்டார்ன்னு சொல்லுங்க!

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் ஜூன் 1ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் முதன்முறையாக ஷங்கருடன் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளார். எப்போதும் ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர், இந்த முறை இந்தியன் 2வில் அனிருத்துடனும், கேம் சேஞ்சர் படத்திற்காக தமன் உடனும் கூட்டணி அமைத்துள்ளார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களில் இருந்தும், முதல் பாடல் வெளியாகிவிட்டன.

சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸான இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பார்ரா என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல், இந்தியன் தாத்தாவின் இன்ட்ரோ சாங்காக உருவாகியிருந்தது. வழக்கமான அனிருத் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். அதேபோல், இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கும். அதில் பாதி கூட இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் நீலோற்பம் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள இப்பாடலை அபே, ஸ்ருதிகா சமுத்திரலா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். மெலடி ஜானரில் உருவாகியுள்ள நீலோற்பம் பாடலில் சித்தார்த்தும் ரகுல் ப்ரீத் சிங்கும் ரொமாண்டிக்கல் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளனர். அதேநேரம் ஷங்கரின் பாடல்களில் இருக்கும் பிரம்மாண்டம் ஏதும் இல்லாமல், ரொம்பவே சிம்பிளாக விஷுவலைஸ் செய்துள்ளார் ஷங்கர்.

இந்தியன் 2 செகண்ட் சிங்கிளை கேட்ட ரசிகர்கள், அனிருத் கொஞ்சம் பெட்டராக ட்ரை செய்துள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அனிருத்தின் கிளாஸிக்கல் டச்சாக இந்தப் பாடல் வந்துள்ளது என்றும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் இந்தியன் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், இந்தியன் 2 படக்குழுவினர் தவிர சிறப்பு விருந்தினர்களாக யார் யாரெல்லாம் பங்கேற்கவுள்ளனர் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow