Pushpa 2: “சூடான தீ கங்கு மாதிரி..” புஷ்பா 2 செகண்ட் சிங்கிள் ரிலீஸ்... கிறங்க வைத்த ராஷ்மிகா!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

May 29, 2024 - 13:12
Pushpa 2: “சூடான தீ கங்கு மாதிரி..” புஷ்பா 2 செகண்ட் சிங்கிள் ரிலீஸ்... கிறங்க வைத்த ராஷ்மிகா!

சென்னை: புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2022ம் ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. சுகுமார் இயக்கிய புஷ்பா தி ரைஸ், பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸானது. செம்மர கடத்தலை பின்னணியாக வைத்து ஆக்ஷன் ஜானரில் உருவான புஷ்பா தி ரைஸ், ரசிகர்களுக்கு தரமான விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோரின் நடிப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் மிரட்டலாக இருந்தது.

அதேபோல், கதை, திரைக்கதை, மேக்கிங், விஷுவல் எபெக்ட்ஸ், சவுண்ட் மிக்ஸிங் என புஷ்பா படத்தை இன்ச் இன்ச்சாக செதுக்கியிருந்தார் இயக்குநர் சுகுமார். இன்னொரு பக்கம் “ஊ சொல்றீயா ஊஹூம் சொல்றீயா மாமா” என ஒரே பாட்டில் ரசிகர்களை கிறங்க வைத்திருந்தார் சமந்தா. ஒட்டுமொத்தமாக செம்ம மாஸ் கமர்சியல் மூவியாக ரிலீஸான புஷ்பா தி ரைஸ், பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் இப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி 2023ம்  தொடங்கிய புஷ்பா 2 ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. புஷ்பா 2 டீசரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸானது. அந்த வரிசையில் தற்போது செகண்ட் சிங்கிளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. The Couple Song என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள புஷ்பா 2 செகண்ட் சிங்கிள், ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் ”சாமி சாமி” என்ற பாடல் மூலம் ஸ்கோர் செய்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். அதகளமான இசையில் உருவான இந்தப் பாடலுக்கு, ராஷ்மிகா மந்தனா போட்ட ஆட்டத்தை ரசிகர்களால் அவ்வளவு ஈஸியாக மறக்க முடியாது.

இதனால் அதே Vibe உடன் புஷ்பா 2ம் பாகத்திலும் ஒரு பாடல் கொடுத்து ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளனர். ”சூடான தீ கங்கு மாதிரி” எனத் தொடங்கும் இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் ரகளையான இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக போட்டுள்ள ஆட்டம், ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்துள்ளது. முக்கியமாக இப்பாடலின் மேக்கிங் வீடியோ மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இதன் ஒரிஜினல் வெர்ஷன் புஷ்பா 2 ரிலீஸாகும் போது படத்தில் இடம்பெறவுள்ளது. 

அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் இயக்குநர் சுகுமாருடன் ராஷ்மிகா மந்தனா டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், ராஷ்மிகா மந்தனாவின் க்யூட் ரியாக்ஷன்களுக்கும் ஆர்ட்டின்ஸ் எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர். புஷ்பா 2ம் பாகத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் புஷ்பா 2 ஆல்பத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்போது வெளியான புஷ்பா 2 செகண்ட் சிங்கிளை, 6 மொழிகளிலும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.         

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow