'பார்டர் 2' திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை: சன்னி தியோல் ரசிகர்கள் கவலை
'பார்டர் 2' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் 'பார்டர் 2' திரைப்படம் நேற்று தினம் வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான 'பார்டர்' படத்தின் இரண்டாம் பாகமாக இது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் பார்டர் 2 திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே இதே போன்ற காரணத்திற்காக கடந்த மாதம் வெளியான ரன்வீர் சிங் உடைய 'துரந்தர்' திரைப்படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தது. வளைகுடா நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. பார்டர் 2 படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் வசூல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பார்டர் 2 திரைப்படம் வெளியாகத்தால், சன்னிதியோல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
What's Your Reaction?

