Lal Salaam: “21 நாள் ஷூட், 10 கேமரா… எல்லாம் மொத்தமா போச்சு” லால் சலாம் தோல்விக்கு ஐஸ்வர்யா விளக்கம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தின் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
தனுஷின் 3, கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை தொடர்ந்து ஐஸ்வரா ரஜினிகாந்த் இயக்கிய மூன்றாவது திரைப்படம் லால் சலாம். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தார். முதலில் 10 நிமிடங்கள் மட்டுமே ரஜினியின் போர்ஷன் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் படம் வெளியான போது, முதல் பாதியில் 15 நிமிடங்களும் இரண்டாம் பாதி முழுவதுமாக ரஜினியின் காட்சிகள் இருந்தன.
கிட்டத்தட்ட லால் சலாம் படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அவரது மொய்தீன் பாய் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், லால் சலாம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் தோல்வியை சந்தித்தது. ஜெயிலர் மூலம் மெஹா ஹிட் கொடுத்து வெறித்தனமாக கம்பேக் கொடுத்த ரஜினிக்கு லால் சலாம் திருஷ்டியாக அமைந்தது.
இந்நிலையில், லால் சலாம் தோல்வி பற்றி படத்தின் இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “21 நாள் ஷூட் பண்ணின ஃபுட்டேஜ் காணாமப் போயிடுச்சு. ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர்களை வைத்து 10 கேமராக்கள் மூலம் ஒரு கிரிக்கெட் போட்டியை லைவ்வாக ஷூட் பண்ணினோம். அதெல்லாமும் மிஸ்ஸாகிடுச்சு, அதுமட்டும் இல்லாம திரும்ப ஷூட் போகவும் முடியல. அப்பாவும் விஷ்ணு விஷாலும் ரீ- ஷூட் போகலாமான்னு கேட்டாங்க. ஆனால் அவர்களது கெட்டப் மாறிவிட்டதால் அதற்கு சான்ஸ் இல்லைன்னு போகல.”
“அதனால கைவசம் என்ன ஃபுட்டேஜ் இருந்துச்சோ அதெல்லாம் வச்சு எடிட் பண்ணி லால் சலாம் படத்தை ரிலீஸ் பண்ணோம். ஹார்ட் டிஸ்க் மட்டும் மிஸ் ஆகலைன்னா நாங்க சொல்ல வந்த விஷயத்தை இன்னும் தெளிவா சொல்லிருப்போம்” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லால் சலாம் தோல்விக்கு இயக்குநராக ஐஸ்வர்யா தான் பொறுப்பேற்க வேண்டும். இப்படியெல்லாம் காரணம் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?