காலை உணவு திட்டத்தால் வருகை பதிவு 90% அதிகரிப்பு... மாநிலத் திட்டக் குழு அறிக்கையில் தகவல்...
காலை உணவு திட்டத்தால் மாணாக்கர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 திட்டங்களின் மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை அதன் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ஜெயரஞ்சன், "காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் தினசரி வருகைப்பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை உள்ளது. காலை 7.30 மணிக்கே குழந்தைகள் பள்ளிக்கு வந்து விடுகின்றனர். இட்லி, தோசை போன்ற உணவுகளை அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக 6,800 குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், பெண்கள், பட்டியல் இன மக்கள், கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் சேவை நல்ல பலன் அளித்துள்ளது. புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளும் இந்த திட்டத்தில் செய்யப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது" என தெரிவித்தார்.
,
What's Your Reaction?