அரசு அலுவலர்களுக்கு 4% அகவிலைப்படி!! யார் யாருக்கு எவ்வளவு?...

Mar 12, 2024 - 16:24
அரசு அலுவலர்களுக்கு 4% அகவிலைப்படி!! யார் யாருக்கு எவ்வளவு?...

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான  அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கியது. இதேபோல் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட  தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இக்கோரிக்கையை பரிசீலித்து  46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த அகவிலைப்படி உயர்வு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு அளிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow