Mankatha: விநாயக் மகாதேவ் கம்பேக்… ரீ-ரிலீஸாகும் மங்காத்தா… அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட் ரெடி!

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக மங்காத்தா ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 18, 2024 - 10:40
Mankatha: விநாயக் மகாதேவ் கம்பேக்… ரீ-ரிலீஸாகும் மங்காத்தா… அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட் ரெடி!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மே 1ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் இன்னும் முழுமையாக முடியாததால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது டீசராவது ரிலீஸாகாதா என ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். அதேநேரம் கண்டிப்பாக மே 1ம் தேதி விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இன்னொரு ஸ்பெஷல் அப்டேட்டும் அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே முன்னணி ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸாகின்றன. அந்த வரிசையில் அஜித்தின் மங்காத்தா படமும் தற்போது இணைந்துள்ளது. அதாவது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தை கொண்டாட ரெடியாகிவிட்டனர். அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் 2011ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இது அஜித்தின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ், மஹத், ஆண்ட்ரியா, அஞ்சலி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. யுவன் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்ப, பிஜிஎம் செம்ம மாஸ் காட்டியது. அதேபோல், அஜித்தின் பைக் ரேஸ் சீன், ஸ்டைலிஷான ஆக்டிங், வெங்கட் பிரபுவின் கலர்ஃபுல் மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தன. அஜித் கேரியரில் மங்காத்தா போல இன்னொரு தரமான மூவி இதுவரை வெளியாகவில்லை என ரசிகர்களே கூறுவதுண்டு.  

இந்நிலையில், மங்காத்தா திரைப்படம் மே 1ம் தேதி ரீ-ரிலீஸாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் சூப்பர் ஹிட் மூவியான கில்லி இந்த வாரம் ரீ-ரிலீஸாகும் நிலையில், அதனைத் தொடர்ந்து அஜித்தின் மங்காத்தாவும் ரசிகர்களை தெறிக்கவிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow