“ஆர்.எஸ்.எஸ் காக்கிச்சட்டையிலும் இருக்கிறது, நீதித்துறையிலும் இருக்கிறது..!” - திருமாவளவன் காட்டம்

"சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்வதுதான் சங் பரிவார் அமைப்பின் நோக்கம்"

Feb 3, 2024 - 11:38
Feb 3, 2024 - 16:57
“ஆர்.எஸ்.எஸ்  காக்கிச்சட்டையிலும் இருக்கிறது,  நீதித்துறையிலும் இருக்கிறது..!” -  திருமாவளவன் காட்டம்

சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்வதுதான் சங் பரிவார் அமைப்புகளின் நோக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  குற்றம்சாட்டியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில்  இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளதாகக் கூறி சென்னை வள்ளுவர் கோட்டம்   அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதில் பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய வழிகாட்டு விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்  கூறுகையில்,.. 

உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதை ஒழிக்க ஒன்றிய அரசு சதி செய்து வருவதாகவும், பல்கலைக்கழக மானியக்குழு  தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்துகொண்டு  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி புதிய வழிகாட்டு விதிமுறைகளை  வகுத்துள்ளது. இப்படிச் செய்தால், பல்கலைக்கழக உயர் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை நிரப்பும்போது காலியாக உள்ள இடங்களில் பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப அது வழி வகுக்கும் என்றும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து “பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை நிலைநாட்ட சமூக நீதிதான் பாதை  . அப்படிப்பட்ட சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்வதுதான் சங் பரிவார் அமைப்பின் நோக்கம்” என்றார். மேலும், சங் பரிவார் அமைப்பின் அரசியல் பிரிவு தான் பாஜக என்றும்,  சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே சங் பரிவார்களின் நோக்கம் என்றும் கூறினார். 

சங் பரிவார், ஆர்‌.எஸ்.எஸ் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். காக்கி சட்டைக்குள் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது; நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். பல்கலைக்கழக மானியக் குழு தலைவராக ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர் தான் இருக்கிறார். அதனால் தான் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்த்தார் என்று சாடினார்.

இதையும் படிக்க  | ஞானவாபி மசூதி வழக்கு - “நாடு பிளவுபட்டு பேரழிவைச் சந்திக்கும்” என சீமான் காட்டம்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow