ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் அதிரடி கைது

அரசு டெண்டர் பெற்று தருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அவரது உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் அதிரடி கைது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளரை அதிரடி கைது

மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர் அரு​கில் உள்ள கலைநகரில் வசிப்​பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக இருந்​தது முதல் அவரிடம் உதவி​யாள​ராக (பிஏ) இருந்​தார் என்பது குறிப்பிடதக்கது. 

ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி​யும் காதலித்து திரு​மணம் செய்​தவர்​கள். கலா​வதி பட்​டயக் கணக்​காள​ராக உள்​ளார். நிதி அமைச்​ச​ராக பழனிவேல் தியாக​ராஜன் பொறுப்​பேற்​றதும், செல்​வாக்கு மிக்க நபராக ஜெய் பாலாஜி வலம் வந்​தார். அமைச்​சரின் பெயரை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல வேலைகளை கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். 

இப்படி கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை  தனது பெயரிலும், மனைவி மற்​றும் பினாமி பெயர்​களில் முதலீடு செய்​தார். ஜெய் பாலாஜி​ மீது அடுக்கடுக்கான புகார்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அமைச்​சர் அவரை எச்​சரித்​து, பணி​யில் இருந்து நீக்கினார்.

மதுரை​யில் உள்ள பிரபல கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரிடம் பல்​வேறு வேலைகளைச் செய்து தரு​வ​தாகக் பணம் பெற்றது.  மாநக​ராட்​சி​யில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்​சம் வரை பெற்​றுள்​ளார். அதுமட்டுமின்றி, மருதம் ரியல் எஸ்​டேட் பெயரில், தவணை முறை​யில் பணம் செலுத்​தி​னால் வீட்டு மனை வழங்​கு​வ​தாக கணவன், மனைவி இரு​வரும் பொது​மக்​களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்​றி​யுள்​ளனர். அமைச்​சரின் பெயரைக் குறிப்​பிட்​டும், ரியல் எஸ்​டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்​துள்​ளது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

கணவன், மனைவி மற்​றும் பினாமிகள் பெயர்​களில் உள்ள அசை​யும், அசையா சொத்​துகளின் ஆவணங்​களைச் சேகரிக்​கிறோம். இந்த சொத்​துகளைப் பறி​முதல் செய்​து, பாதிக்​கப்​பட்​டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow