மாற்றப்படும் MI கேப்டன்? CSK-வில் ஹர்திக் பாண்டியா..?

2027 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறக்கூடும் என்ற தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவி வருகின்றன. 

Jul 15, 2026 - 17:30
மாற்றப்படும் MI கேப்டன்? CSK-வில் ஹர்திக் பாண்டியா..?

தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அல்லது இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா ஆகியோரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த சில சீசன்களாக திலக் வர்மா பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், அணியின் எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய வீரராகவும் பார்க்கப்படுகிறார். அதேபோல், பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கி வரும் பும்ராவும் கேப்டன் பதவிக்கான முன்னணி தேர்வாகக் கருதப்படுகிறார்.

மறுபுறம், ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் வேறு அணிக்கு மாற்றும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தங்களது அணியில் சேர்க்க ஆர்வம் காட்டக்கூடும் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மறுபக்கம் அவர் குஜராத் அணிக்கே திரும்பவும் வாய்ப்புள்ளதாக்க் கூறப்படுகிறது. 

இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அல்லது ஐபிஎல் நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, கேப்டன் மாற்றம் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் டிரேட் தொடர்பான தகவல்கள் தற்போது யூகங்களாகவே பார்க்கப்படுகின்றன. வரும் மாதங்களில் அணிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது மட்டுமே இந்த விவகாரத்தில் தெளிவான நிலை தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow