FIFA: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!
இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.
23 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து போட்டி கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணிகள் இன்று மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக களத்தில் இறங்கின. ஆனால் முதலில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 வது நிமிடத்தில் கோல் அடித்த நிலையில் இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது. மறு புறம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றவாது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மோத உள்ளன. உலகக் கோப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றும் இலக்குடன் அர்ஜென்டினா களமிறங்கவுள்ள நிலையில் இறுதிப் போட்டி குறித்து கால்பந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
What's Your Reaction?



