நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி... ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து தங்கம் விற்பனையாகிறது.

Aug 5, 2026 - 17:42
நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி... ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!
Gold Price

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கு விற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு மேலும் ரூ.960 அதிகரித்து ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு மேலும் ரூ.120 உயர்ந்து ரூ.13,480-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.2,240 உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அடுத்த சில நாட்களிலும் விலையில் மேலும் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow