திமுகவில் அடுத்த விக்கெட் : பனையூரை நோக்கி பன்னீர்செல்வம்? பதறிப்போன அறிவாலயம்....
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது தவெகவில் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது திமுக ஆட்சியிலும் சோபா மாடலை பின்பற்றுகிறதா தவெக என்று கேள்வி எழுந்துள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடியான திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்தக்கட்ட திருப்பமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை உருவாகியதால், திமுகவில் இதுவரைக்குமே பன்னீர்செல்வத்திற்கு எந்த வொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாமல் இருப்பதால் ஓ.பி.எஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து குதிரை பேரத்தின் வாயிலாக தவெக பலரும் தம்முள் இழுத்துக் கொண்டுள்ளனர்.சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர்,கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன்,எஸ்.வளர்மதி,வெல்லமண்டி நடராஜன், ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திமுகவிலிருந்து யாரும் தவெகவை நோக்கி செல்லாமல் இருந்த நிலையில் தற்போது திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செலயலராகப் பணியாற்றி வந்த திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மீனா ஜெயக்குமார் தற்போது தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.இதற்கு முன்னாள் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மற்றும் போரூர் தொகுதி திமுகவின் முன்னாள் எம்எல்ஏ எம்எஸ் சண்முகம் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறந்தது என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய வேண்டும் என்பதே அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமாக இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.இதனால்
மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது திமுகவிலிருந்தும் விலகி தவெகவில் இணையவது திமுக தரப்பினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவிலும் தவெக குதிரை பேரத்தை நடத்தியுள்ளதா? இனி திமுகவிலிருந்து விலகி எத்தனை விக்கெட்டுக்கள் தவெகவில் இணைய போகிறார்களோ? என்று அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.
What's Your Reaction?

