ஆளுநர் பதவியை துறக்கும் தமிழிசை?...தேர்தலில் நிற்க திட்டமா?
ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை செளந்தராஜன் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை செளந்தரராஜன், 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் தமிழிசை செளந்தரராஜன் தனது ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளதாகவும் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?