"முழு பூசணிக்காயை இனி சோற்றில் மறைக்க முடியாது.." கச்சத்தீவு பிரச்சனை - ஜி.கே.வாசன் பேச்சு..

Kachchathivu problem - GK Vasan

Apr 3, 2024 - 10:39
"முழு பூசணிக்காயை இனி சோற்றில் மறைக்க முடியாது.." கச்சத்தீவு பிரச்சனை - ஜி.கே.வாசன் பேச்சு..

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முழு பூசணிக்காயை இனி சோற்றில் மறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசின் சாதனைகளை சொல்வதா அல்லது  மாநில திமுக அரசின் வேதனைகளை மக்கள் மத்தியில் சொல்வதா என அவர் தெரிவித்தார்.

மக்கள் விரோத ஆட்சியாக திமுக மாறியுள்ளதாகவும், கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் ஏழைஎளிய மக்களின் மீது சுமையை ஏற்றிய அரசு தான் திமுக எனவும் பால்விலையில்  தொடங்கி மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு  என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கல்வியிலேயே அரசியலை புகுத்திய திமுக அரசு நீட் தேர்வை ரத்துசெய்வோம் எனக்கூறி மாணவர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். 

கச்சத்தீவு பிரச்சனையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் திமுகவும் காங்கிரசும் முயற்சிப்பதாகவும், இவ்விவகாரத்தில் இருகட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறினார். இந்த பிரச்சனைக்கு பிரதமர் மோடியால் மட்டுமே தீர்வு காணமுடியும் எனவும் அவர் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow